தடையை மீறி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டி-காளை மோதியதில் காவல் ஆய்வாளர் காயம்

0 1871

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடையை மீறி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காவல் ஆய்வாளர் காயமடைந்தார்.

நடுவிக்கோட்டை அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன.

தகவலறிந்து வந்த போலீசார் அனைவரையும் அப்புறப்படுத்திய போது, எதிர்பாராதவிதமாக அவிழ்த்துவிடப்பட்ட காளை ஒன்று காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கத்தின் மீது மோதியதில் அவர் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments