சரக்கு வாகனம் மோதுவதில் இருந்து நூலிழையில் தப்பிய முதியவர்-சிசிடிவி காட்சிகள்

0 3638

திருநெல்வேலி அருகே, சாலையில் நடந்து சென்ற நபர், கட்டுபாட்டை இழந்து பாய்ந்தோடிவந்த சரக்கு வாகனத்திடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மானூர் தெற்கு வளைவு அருகே ஒரு முதியவர் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் அங்கிருந்த வாகனங்களை சேதப்படுத்தியதோடு, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த முதியவர் மீது மோதுவது போல் வந்து விலகி சென்றது.

இக்காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில் இந்த வளைவு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments