தடுப்பூசி போட்ட சாதனையைக் கண்டு ஓர் அரசியல் கட்சிக்குக் காய்ச்சல் வந்துவிட்டது - பிரதமர் மோடி

0 2761

ஒரே நாளில் இரண்டரைக் கோடி தடுப்பூசி போட்ட சாதனையைக் கண்டு ஓர் அரசியல் கட்சிக்குக் காய்ச்சல் வந்துவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெள்ளியன்று ஒரேநாளில் இரண்டரைக் கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. சனி மாலை நிலவரப்படி நாட்டில் மொத்தம் 80 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது உலகில் எந்த நாட்டிலும் இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

கோவா நலவாழ்வுத்துறை அலுவலர்களுடன் காணொலியில் பேசிய பிரதமர் மோடி, தடுப்பூசி சாதனைக்குக் காரணமான மருத்துவ அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் அனைவரையும் பாராட்டினார்.

தடுப்பூசி போடுவதால் பக்கவிளைவாய் காய்ச்சல் வருவதாக மக்கள் தெரிவிப்பதாகவும், தனது பிறந்தநாளில் இரண்டரைக் கோடி தடுப்பூசி போட்ட சாதனையைக் கண்டு ஓர் அரசியல் கட்சிக்குக் காய்ச்சல் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments