அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளில் இருந்து தூதர்களைத் திரும்ப அழைத்த பிரான்ஸ்.. அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் உடன்பாட்டால் முறியும் கூட்டணி.!

0 2303

பிரான்சிடம் அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் திட்டத்தைக் கைவிட்டு, அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா உடன்பாடு செய்ததால், இரு நாடுகளிலும் உள்ள தங்கள் தூதர்களை பிரான்ஸ் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது.

நாலரை இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்சிடம் வாங்க ஆஸ்திரேலியா 2016ஆம் ஆண்டில் இருந்து பேச்சு நடத்தி வந்தது.

இந்நிலையில் புதனன்று அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவை முக்கூட்டு உடன்படிக்கை செய்துகொண்டன. இதன்படி ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா நீர்மூழ்கிக் கப்பல்களை விற்க உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரான்ஸ் இதை நம்பிக்கைத் துரோகம் எனக் கூறியதுடன், இரு நாடுகளில் இருந்தும் தனது தூதர்களைத் திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.

பிரான்சிடம் உள்ள நீர்மூழ்கிகள் தொழில்நுட்பத்தால் பின்தங்கியவை வழக்கொழிந்தவை திறன்குறைந்தவை என்றும், அவற்றைச் சீனக் கடற்படையினர் எளிதில் கண்டறிந்துவிடுவர் என்றும் கூறிய அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிடச் செய்து, சீனாவுக்கு எதிரான கண்காணிப்புக்குத் தனது நீர்மூழ்கிகளை வாங்க ஆஸ்திரேலியாவை உடன்படச் செய்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments