தீவிரவாதிகள் என சந்தேகிக்கும் 6 பேரைக் கைது செய்த டெல்லிக் காவல்துறை-மும்பையில் பெரிய ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

0 1794

தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 6 பேரை டெல்லிக் காவல்துறையினர் சிறப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதையடுத்து மும்பையில் பெரிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிடம் பயிற்சி பெற்ற இருவர் உட்பட 6 பேரை மும்பையில் டெல்லிக் காவல்துறை சிறப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதையடுத்து மும்பை சிஎஸ்டி, சென்ட்ரல், தாதர், குர்லா, பாந்த்ரா ஆகிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில்நிலையங்களின் உள்ளேயும் வெளியேயும் ஏழாயிரம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  உள்ளே வரும் பயணிகளின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் உடைமைகளும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments