அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும் - தமிழக அரசு

0 2121

ரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணியின் தொகுதியான குமாரபாளையத்தில், உள்கட்டமைப்பு பணிகளுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

அரசின் திட்டங்கள் அமல்படுத்தும் போது, அனைத்து தொகுதிகளுக்கும் சமமான பங்கீடு வழங்கப்படும் என்றும், குறைவான நிதி ஒதுக்கப்பட்டது என்ற குறை இருக்காது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments