திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ

0 2565

முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமூல் காங்கிரசில் இணைந்துள்ளார். மேற்கு வங்கத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை வெற்றிபெற்ற பாபுல் சுப்ரியோ மத்திய பாஜக அரசில் 2014ஆம் ஆண்டில் இருந்தே அமைச்சராக இருந்து வந்தார்.

ஜூலை மாதம் அமைச்சரவை மாற்றத்தின்போது அவரது பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்துப் பாஜகவில் இருந்து விலகிய அவர் அரசியலைவிட்டே ஒதுங்குவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் அபிசேக் பானர்ஜி முன்னிலையில் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments