20 ஆண்டுகளுக்கு முன் பெண் நண்பரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கு -அமெரிக்காவின் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் குற்றவாளி என அறிவிப்பு

0 2074

அமெரிக்காவின் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் ராபர்ட் டர்ஸ்ட் (Robert Durst), 20 ஆண்டுகளுக்கு முன் தனது நெருங்கிய பெண் நண்பரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். 

நியூயார்க்கின் ரியல் எஸ்டேட் கோடீஸ்வரரான Robert Durst, காணாமல் போனதாக கருதப்பட்ட தன் மனைவியைப் பற்றி, தன் நெருங்கிய நண்பரான சூசன் பெர்மனிடம் (Susan Berman) போலீசார் விசாரணை மேற்கொள்வதை தவிர்க்க, கடந்த 2 ஆயிரமாவது ஆண்டில் Susan Berman-ஐ அவர் சுட்டுக் கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது.

20 ஆண்டுகளாக குற்றச்சாட்டை  Robert Durst மறுத்து வந்த நிலையில், இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவர் குற்றவாளி என லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அறிவித்ததுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments