நம்பி விட்ட தாய்.. சித்தி மகன் என்றும் பாராமல் சித்திரவதை.. சிறுவனை அடித்து துன்புறுத்தி கொலை செய்த கொடுமைக்கார பெண் கைது..!

0 2365

சென்னை தாம்பரம் அருகே, சித்தி மகன் என்றும் பாராமல் 5 வயது சிறுவனை நான்கு மாதமாக அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக 20 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த சூசைமேரி என்ற பெண், கூலி வேலைக்கு செல்வதால், தனது 5 வயது மகன் ஆபேலை, பீர்க்கன்காரணையில் சகோதரியின் மகள் மேரியின் கவனிப்பில் விட்டுள்ளார்.

சிறுவன் ஆபேல் திடீரென மயக்கம் அடைந்ததாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

சிறுவனின் உடல் முழுவதும் தீக்காயங்கள் மற்றும் அடித்து துன்புறுத்திய அடையாளங்கள் இருந்ததால் மேரியை போலீசார் விசாரித்துள்ளனர்.

மேரி கடந்த நான்கு மாதமாக வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுவனை அடித்து துன்புறுத்தியதும், நேற்றும் வழக்கம்போல சித்திரவதை செய்ததில் சிறுவன் மயங்கி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments