அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 2080

அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும்.

நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும்  பெய்யக்கூடும்.

அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் ஒருசில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு  லேசான மழை பெய்யக்கூடும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments