ஆன்லைன் வகுப்பில் இருந்த சிறுமியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய மர்மநபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0 1993
ஆன்லைன் வகுப்பில் இருந்த சிறுமியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய மர்மநபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

செல்போனில் ஆன்லைன் வகுப்புகளை கவனித்துக்கொண்டு இருந்த புதுச்சேரி சிறுமிக்கு போன் செய்து ஆபாசமாக பேசிய கன்னியாகுமரியை சேர்ந்த கார் ஓட்டுனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான்.

புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசி மர்ம நபர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

புகார் அளித்ததின் பேரில், செல்போன் எண்ணை வைத்து சிறுமியிடம் ஆபாசமாக பேசியது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் லாசர் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments