ஆப்கான் தாலிபான் அரசை அங்கீகரிக்க அவசரம் காட்ட வேண்டாம் உலக நாடுகளுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

0 2079

ஆப்கன் அரசு அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்பதால், அதை அங்கீகரிக்க அவசரம் காட்ட வேண்டாம் என உலக நாடுகளைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் ஆப்கான் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, அனைவரையும் உள்ளடக்காத, எந்தப் பேச்சுக்களும் நடத்தாத வகையில் தாலிபான் அரசு அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கான நிதியுதவி ஆகியவற்றைத் தடுக்க ஒரு நெறிமுறையை உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை இல்லாத சூழல், அடிப்படைவாதம் ஆகியன நிலவுவது பிற பயங்கரவாத அமைப்புகள் வன்முறையின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments