வாகன ஓட்டியின் தலை மீது டிராக்டர் டயர் ஏறி இறங்கியது: தலைக்கவசம் அணிந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்.!

0 5315

குஜராத் மாநிலத்தில், வாகன ஓட்டியின் தலை மீது டிராக்டர் ஏறி இறங்கிய போதும், தலைகவசம் அணிந்திருந்ததால் அவர் உயிர் பிழைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

கர்பாடா நகரில் மனைவி மற்றும் கை குழந்தையுடன் வாகன ஓட்டி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

சாலையில் மழைநீர் தேங்கியதால் அங்கிருந்த பள்ளத்தை கவனிக்காமல் வாகனத்தை செலுத்திய நபர் குடும்பத்தினருடன் இடறி விழுந்தார். அப்போது, எதிரே வந்த டிராக்டரின் டிராலியின் சக்கரம் அவர் தலை மீது ஏறி இறங்கியது.

இருந்தபோதும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர் எவ்வித காயமும் இன்றி உடனடியாக எழுந்தார்.

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை இது உணர்த்துவதாக நெட்டிசன்கள் இணையத்தில்  பதிவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments