இணையவழி உணவுக்கான 5சதவிதம் வரியை உணவகங்களுக்குப் பதில் உணவு வழங்கல் நிறுவனம் பெறும் - நிதியமைச்சகம் அறிவிப்பு

0 2310

இணைய வழி உணவு வாங்கும் நுகர்வோரிடம், உணவகங்களுக்குப் பதில் உணவு வழங்கும் நிறுவனங்களே 5 விழுக்காடு வரியைப் பெறும் எனவும் இதனால் கட்டணம் உயராது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்  இணையவழி உணவு வாங்கும் நுகர்வோரிடம் 5 விழுக்காடு வரியை உணவகங்கள் பெறுவதற்குப் பதில், உணவு வழங்கும் நிறுவனங்களே பெறுவதை 2022 ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஜிஎஸ்டி பதிவுபெற்ற உணவகங்கள் விற்பனையைக் குறைத்துக் காட்டுவதையும், பதிவுபெறாத உணவகங்கள் வரி ஏய்ப்பதையும் தடுக்க இந்த முறை கொண்டுவரப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒருமுறைதான் வரி விதிப்பு என்பதால் நுகர்வோருக்குக் கூடுதல் வரிச்சுமை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments