மீண்டும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆகிறார் அனில் கும்ப்ளே ? பிசிசிஐ விண்ணப்பிக்க கோரும் என தகவல்

0 3345

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் அனில் கும்ப்ளேவை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பதவிக்கு அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த வாய்ப்பாக வி.வி.எஸ். லக்ஷ்மணன் பெயரும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2016-17ம் ஆண்டில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளாக இருந்த அனில் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். 

இந்நிலையில், ரவிசாஸ்திரி பதவிக்காலம் டி20உலகக் கோப்பையுடன் முடிந்த பின், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லக்ஷ்மணனை பிசிசிஐ விண்ணப்பிக்க கோரும் என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments