சிமெண்ட் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து

0 1919
சிமெண்ட் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, ராம்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிமெண்ட் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

விண்டர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில், சிமெண்ட் ஓடு உற்பத்தி செய்யும் பணியின் போது, திடீரென பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

அதில், 5 வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்த நிலையில் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைகாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments