உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி -ஆளுநர் ஆர்.என்.ரவி

0 2408

தமிழகத்தில் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு தனது செயல்பாடு இருக்கும் என்று புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.என்.ரவி, தமிழில் வணக்கம் எனக் குறிப்பிட்டார். உலகின் தொன்மையான, இன்னும் உயிர்ப்போடு உள்ள பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் உரிய தமிழ் மண்ணில் ஆளுநராக பணியாற்றுவது பெருமை அளிப்பதாகக் கூறினார்.

பழமையான வளம் மிகுந்த தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு ஆளுநராக பொறுப்பேற்றிருப்பது சவாலுக்கும் அப்பாற்பட்டது என்றும் அவர் பதிலளித்தார்.

மாவட்டந் தோறும் ஆய்வுக்கு செல்வது பற்றிய கேள்விக்கு தேவைப்பட்டால், நிலைமையை பொறுத்து முடிவு செய்வேன் என ஆளுநர் விளக்கமளித்தார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து இப்போதே மதிப்பீடு செய்துவிட முடியாது என பதில் அளித்த புதிய ஆளுநர், ஆனால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது, அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என நம்புவதாகக் குறிப்பிட்டார்.

மத்திய உளவுப் பணியில் இருந்த ஒருவர், தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டது உள்நோக்கம் கொண்டது என்றெல்லாம் கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். சுமுக உறவைப் பேணி, வளர்ச்சிக்கு வழி வகுப்பதுதான் தனது நோக்கம் என ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments