உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடரும் - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

0 2245
உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடரும் - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தொடரும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கமலாயத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை, மின்னணு தொடுதிரை கணிணியை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் அரசியல் சாசன சட்டத்தை மீறி ஆளுநர் எதுவும் செய்யமாட்டார் என்பது குறித்த புரிதல் இல்லாமல் எதிர் கட்சிகள் விமர்சிப்பதாக தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments