ஒத்த ரோசாவுக்கு சண்டையிட்ட ரெண்டு ராசாக்கள்..! காதல் பஞ்சாயத்து கொலையில் முடிந்தது..!

0 4539
ஒத்த ரோசாவுக்கு சண்டையிட்ட ரெண்டு ராசாக்கள்..! காதல் பஞ்சாயத்து கொலையில் முடிந்தது..!

சேலம் மாவட்டம், குமரகிரி அருகே மலைப்பகுதியில் ஒரு பெண்ணுக்காக இரு இளைஞர்களுக்கு இடையே  நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.  காதலனுக்கு துணைக்கு சென்ற நண்பனை காதலில் வீழ்த்திய பெண்ணால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணத்தை சேர்ந்தவர் கிருபை ராஜ் . தனியார் மில் ஊழியரான இவருக்கும், ஏற்கனவே 2 திருமணமாகி கணவன்மார்களை பிரிந்து 3 வதாக ஒருவருடன் குடித்தனம் நடத்திவரும் கலைமணி என்ற பெண்ணுக்கும் 4 வதாக காதல் மலர்ந்துள்ளது.

கிருபைராஜ் தனது காதலியை சந்திக்க செல்லும் போது துணைக்கு நண்பன் கலையரசனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே முதல் கணவனை கழட்டிவிட்டு கிருபைராஜை காதலித்து வந்த கலைமணி 5 வதாக காதலனின் நண்பனான கலையரசனையும் தனது காதல் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகின்றது.

ஒரே நேரத்தில் நெருங்கிய நண்பர்கள் இருவரை விபரீதமாக காதலித்த கலைமணியை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக நண்பர்கள் இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இதனால் நண்பர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் கிருபைராஜ் தனது காதலி கலைமணியை அழைத்துக் கொண்டு சேலம் அருகே உள்ள குமரகிரி அருகே இருக்கும் மலைப் பகுதிக்கு வருங்கால வாழக்கை குறித்து பேசுவதற்கு சென்றுள்ளான். அப்போது முன் கூட்டியே சொல்லி வைத்தாற் போல ஐந்தாம் காதலன் கலையரசன் அங்கு வந்ததால், காதலி கலைமணியை திருமணம் செய்து கொள்வது யார் ? என்று நண்பர்கள் இருவரும் காதலி முன்னிலையில் மோதிக் கொள்ள, அவர்களை சமாதனப்படுத்தி தனது விபரீத காதலுக்கு பஞ்சாயத்து செய்துள்ளார் கலைமணி..!

அப்போது கிருபை ராஜ் , தான் , கலை மணியை திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதால், தனக்கு விட்டுக்கொடுக்கும்படி கேட்க, இதற்கு மறுப்பு தெரிவித்த கலையரசன், கலைமணியை தனக்கு தான் என்று அடம்பிடித்துள்ளான். இதனால் சமாதான பேச்சுவார்த்தையில் வாக்குவதம் ஏற்பட்டு நண்பர்கள் இருவரும் மலைப்பகுதியில் மோதி கொண்டதாக கூறப்படுகின்றது.

தலையில் காயமடைந்ததால் ஆத்திரமடைந்த கலையரசன் தனது இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கிருபைராஜை சரமாரியாக குத்தியதாகவும். இதில் கிருபைராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.

தன்மீதுள்ள ஆசையால் உயிரி பறிகொடுத்த கிருமைராஜின் சடலத்தை தூக்கி வைத்து கதறி அழுத நிலையில் அங்குள்ள பொதுமக்கள் கத்தியுடன் நின்ற கலையரசனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அங்கு வந்த கிச்சிபாளையம் போலீசார், கொலையாளி கலையரசனுக்கு செல்போன் மூலம் தகவல் கொல்லி வரவைத்தாயா.? என காதலி கலைமணியிடம் கேட்க, இல்லை என்று மறுத்து கதறி அழுவதில் கவனம் செலுத்தினார் கலைமணி...

இதையடுத்து கிருபைராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கைது செய்யப்பட்ட கலையரசனிடம் நடத்திய விசாரணையில் கலைமணி தான் குமரகிரிமலைக்கு கிருபைராஜூடன் செல்லும் தகவலை தனக்கு போனில் சொல்லி வரவைத்ததாகவும், அங்கு வைத்து தங்கள் காதலை கிருபைராஜுக்கு புரியவைக்க மேற்கொண்ட முயற்சியால் கைகலப்பு உருவாகி கொலையில் முடிந்து விட்டதாக கூறியுள்ளான். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கலைமணியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையின் போது தான் கலைமணிக்கு தான் 5 வது காதலன் என்ற தகவலே கலையரசனுக்கு தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் மலர் விட்டு மலர் தாவும் வண்டை போல வாண்டாக ஆளை மாற்றும் இன்ஸ்டண்ட் காதலிகளால் சமூகத்தில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த கொலை சம்பவமும் ஒரு சான்று.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments