சீரியல் படப்பிடிப்புக்காகச் சென்ற வேன்… மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 2 ஊழியர்கள் உயிரிழப்பு

0 30262

சென்னையிலிருந்து சீரியல் படப்பிடிப்புக்காக சேலம் மாவட்டம் ஏற்காடு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

தனியார் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புக் குழுவினர், ஏற்காட்டைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு பெலாத்தூர் என்ற பகுதிக்கு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். இதில் தொழில்நுட்படக் கலைஞர்கள்  சென்ற ஈச்சர் வாகன ஓட்டுநர் (வளைவு ஒன்றில் வேகமாக வந்த லாரிக்கு வழிவிட முயற்சித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரமிருந்த 30 அடி ஆழ பள்ளத்தில் வாகனம் உருண்டு சென்று தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பாண்டியன், மனோஜ் என 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேரை படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments