தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு

0 2122

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால், மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்வில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 1976 ம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கிய ஆர்.என்.ரவி, மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி 2012 ல் ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராக நியமிக்கப்படும் வரையில், நாகலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி வகித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments