காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருட்டு..!

0 1915

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி டவுன் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார் ஒன்று கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், 15-ம் தேதி இரவு திருடப்பட்டது.

காவல்நிலைய சீரமைப்பு பணிக்க்கா சிசிடிவி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால், துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில், நீண்ட விசாரணைக்கு பின்னர் காரை கண்டுபிடித்த போலீசார், சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments