இந்தியாவில் இன்று ஒரேநாளில் 2 கோடிப் பேருக்குத் தடுப்பூசி போட்டு சாதனை

0 2620

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் இரண்டு கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஆகஸ்டு 31ஆம் நாளில் ஒருகோடியே 30 இலட்சம் பேருக்குத் தடுப்பூசி போட்டதே சாதனையாக இருந்தது. ஜனவரி 16ஆம் நாளில் தொடங்கி இன்று மாலை வரை இந்தியாவில் மொத்தம் 79 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நாட்டின் பல மாநிலங்களிலும் ஏழரைக்கோடி டோஸ் தடுப்பு மருந்துகள் இருப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேவேகத்தில் சென்றால் நூறு கோடி டோஸ் தடுப்பூசிகள் போட்ட சாதனையை அக்டோபர் முதல் வாரத்தில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments