தீவிரவாதத்தை எதிர்த்து அனைவரும் இணைந்து போராட வேண்டும் - பிரதமர் மோடி

0 2230

தெற்கு ஆசியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தீவிரவாதத்தை எதிர்த்து அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி இருக்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் தொடங்கியது. மாநாட்டை தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்கி நடத்துகிறார். மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் பிரதிநிதியாக நேரில் கலந்து கொண்டுள்ளார். பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று மாநாட்டின் தொடக்க நிகழ்வில் 6 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்றார். அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய மிகப்பெரிய சவால்கள் உள்ளதாகவும், இந்த பிரச்சனைகளின் அடிப்படை காரணம் தீவிரவாதம் என்றும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிகழ்வுகள் இந்த சவாலை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments