தந்தையால் 6 வயதில் கடத்தப்பட்ட சிறுமி.. 14 ஆண்டுகளுக்குப் பின் ஃபேஸ்புக் மூலம் தாயை கண்டுபிடித்து சேர்ந்த சம்பவம்

0 4164

அமெரிக்காவில் 14 ஆண்டுகளுக்கு முன் 6 வயது சிறுமியாக கடத்தப்பட்ட ஒருவர் இளம் பெண்ணாக ஃபேஸ்புக் மூலம் தன் தாயுடன் மீண்டும் சேர்ந்த சம்பவம் நடந்துள்ளது.

19 வயதாகும் ஜாக்குளின் ஹெர்னான்டெஸ் 2007 ஆம் ஆண்டில் ஃபுளோரிடாவில் அவரது தந்தையால் கடத்தப்பட்டு மெக்ஸிகோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள தன் அம்மா  ஏஞ்சலிகாவை   ஃபேஸ்புக் மூலம்  தொடர்புகொண்ட Jacqueline, தான் மெக்ஸிகோவில் உள்ளதாகவும், அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையான டெக்சாஸின் லரெடோவில் சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து போலீசாரிடம் Angelica தகவல் அளித்துள்ளார். இருவரும் சந்திப்பதற்குள் Jacqueline குறித்த பின்னணியை ஆய்வு செய்த அதிகாரிகள், அவர் 14 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன Angelica-வின் மகள் தான் என்று உறுதிப்படுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments