சாலை வளைவில் எதிரே வந்த லாரி - பதற்றத்தில் முன்பக்க பிரேக்கை அழுத்தியதால் விபத்து...கால் துண்டான பரிதாபம்

0 3807

கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலை வளைவில் வந்த டாரஸ் லாரியைக் கண்டு திடீரென முன்பக்க பிரேக்கைப் பிடித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் சக்கரம் ஏறி அவரது ஒரு கால் துண்டானது.

பாரக்கன்விளையைச் சேர்ந்த சஜின் என்பவர் நேற்று ஹெலன்நகர் பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இணையம்தோப்புப் பகுதியிலுள்ள சாலை திருப்பம் ஒன்றில் திரும்பியவர், திடீரென எதிரே பாறைக் கற்களை ஏற்றி வந்த டாரஸ் லாரியைக் கண்டதும் பதற்றத்தில் ஸ்கூட்டரின் முன்பக்க பிரேக்கை அழுத்தினார் என்று கூறப்படுகிறது.

அப்பகுதியில் மழையில் அடித்துவரப்பட்ட மணல் சிதறிக் கிடந்ததாகக் கூறப்படும் நிலையில், சஜின் தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் முன்சக்கரம் ஏறியதில் அவரது கால் ஒன்று துண்டானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments