ஓட்டலுக்குள் புகுந்து லேப்டாப், செல்போன்கள் திருட்டு... சட்டையை கழற்றி முகத்தில் கட்டிக்கொண்டு கைவரிசை காட்டிய மர்ம நபர்

0 1835

மதுரையில் நள்ளிரவில் ஹோட்டலுக்குள் புகுந்து லேப்டாப், செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்ற முகமூடி திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தல்லாகுளம் பகுதியில் உள்ள குமார் மெஸ் அசைவ உணவகத்தின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்த மர்ம நபர், தனது சட்டையை கழற்றி முகத்தில் கட்டிக்கொண்டு ஹோட்டல் உள்ளே தவிழ்ந்து வந்தான். பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவை திருப்பி வைத்திவிட்டு பில் போடும் பகுதியில் இருந்த லேப் டாப், செல் போன் உள்ளிட்டவைகளை திருடி சென்றான்.

திருட்டு சம்பவத்தில் முன்னாள் ஊழியர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments