பள்ளி மாணவர்களின் வாட்சப் குழுவில் ஆபாச வீடியோ பகிர்ந்த ஆசாமி கைது

0 2469

சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் பள்ளி மாணவர்களின் வாட்சப் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.

அங்குள்ள ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு என வாட்சப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று வழக்கம்போல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென குழுவில் ஆபாச வீடியோ ஒன்று வந்துள்ளது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த நீலாங்கரை போலீசார், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மாணவர் ஒருவரின் உறவினரான பசுபதி என்பவன் மாணவரிடமிருந்து செல்போனை வாங்கி வீடியோவை பகிர்ந்ததை கண்டறிந்தனர். அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments