தெருநாய்களிடம் சிக்கிய சிறுவன்...கொலைவெறியோடு குதறியெடுத்த காட்சிகள்..!

0 4623
தெருநாய்களிடம் சிக்கிய சிறுவன்...கொலைவெறியோடு குதறியெடுத்த காட்சிகள்..!

திருப்பூரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை தெருநாய்கள் சூழ்ந்துகொண்டு கடித்துக் குதறும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

திருப்பூர் - தாராபுரம் சாலை தெற்குதோட்டம் பகுதியை சேர்ந்த பஞ்சு விற்பனை இடைத்தரகரான இராமசாமி என்பவரது 6 வயது மகன் பிரகதீஷ். 3 வகுப்பு படித்து வரும் பிரகதீஷ், நேற்று மாலை தனது வீட்டருகே உள்ள காலியிடத்தில் விளையாடிக் கொண்டிருந்ததான். அப்போது அங்கு சுற்றிக் கொண்டிருந்த தெருநாய்கள் திடீரென சிறுவனை சூழ்ந்துகொண்டு கடித்துக் குதறத் தொடங்கின. தலை, கை, கால், என திசைக்கு ஒருபுறமாக நாய்கள் வெறித்தனமாக கடித்துக் கொண்டிருக்க, சிறுவன் கத்திக் கூச்சலிட்டிருக்கிறான்.

பிரகதீஷின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை விரட்டியடித்து அவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். தெற்குத் தோட்டம், வெள்ளியங்காடு, குப்பாண்டம்பாளையம், கோவில்வழி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும், தெருவில் விளையாடும் சிறுவர்கள், சாலையில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

மற்றொரு அசம்பாவிதம் நேர்வதற்கு முன் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments