தலையில் சுடப்பட்டு கிடந்த தம்பி... சடலத்தை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி பரிதவித்த சகோதரி

0 3975

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மர்மமான முறையில் தலையில் சுடப்பட்டு கிடந்த 17வயது சிறுவனின் சடலத்தை கண்டு, அவனது சகோதரியும் அதிர்ச்சிக்குள்ளாகி பரிதவித்த வீடியோ காண்போரை கண் கலங்கச் செய்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பகத் சிங், பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற பகத்சிங்கின் 17வயது மகன் ராகுல், சஞ்சய்நகர் பேருந்து நிலையத்தில் தலையில் சுடப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அந்த சடலத்தை பார்த்து ராகுலின் சகோதரி அதிர்ச்சி அடையும் வீடியோ காண்போரை கலங்க வைக்கிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார், அங்கு கிடந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். ராகுல் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற்றவர் எனக் குடும்பத்தினர் கூறும் நிலையில், அவர் தன்னை தானே சுட்டுக் கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments