ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா முக்கூட்டு உடன்படிக்கை: இந்தோ பசிபிக் மண்டலத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க நடவடிக்கை

0 2052

இந்தோ பசிபிக் மண்டலத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியன முக்கூட்டு உடன்படிக்கை செய்துகொண்டுள்ளன.

ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் புதனன்று உடன்படிக்கையில் கையொப்பமிட்ட பின் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, இந்தோ பசிபிக் மண்டலத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும், அப்பகுதியில் தங்கள் நலன்களைக் காக்கவும் இந்த உடன்பாடு உதவும் எனத் தெரிவித்தனர். உடன்பாடு செய்துகொள்வதற்கு முன் இது குறித்து இந்தியப் பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலியப் பிரதமர் தொலைபேசியில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments