மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

0 2315
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி வரிமுறையின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், அதுதொடர்பாக முடிவெடுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக, காணொலி முறையில் நடைபெற்று வந்த நிலையில், சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு நேரடிக் கூட்டம் நடைபெறுகிறது. இன்றை கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில வரி விதிப்புகளின் கீழ் உள்ள பெட்ரோல், டீசலை, ஜிஎஸ்டி வரிமுறையின் கீழ் கொண்டுவருவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இதேபோல, ஸ்விக்கி, சொமாட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி, டோர் டெலிவரி, டேக்அவே சேவைகளை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவந்து 5 சதவீதம் வரி விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. கொரோனா சிகிச்சையில் பயன்படும் 4 முக்கிய மருந்துகளின்  மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்ட நிலையில், அந்த சலுகையை டிசம்பர் வரை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி முறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட கடந்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு மத்திய அரசு 1 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்திருந்தாலும், அது போதவில்லை என்பதால், அதுகுறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments