விண்வெளி சுற்றுலா பயணம் சென்ற 4 பேர் நலமாக உள்ளனர் ; ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தகவல்

0 7795
விண்வெளி சுற்றுலா பயணம் சென்ற 4 பேர் நலமாக உள்ளனர் ; ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தகவல்

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு சுற்றுலா சென்றிருக்கும் நால்வரும் நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கென்னடி வெண்வெளி மையத்திலிருந்து 4 பேருடன் விண்ணில் பாய்ந்த இன்ஸ்பிரேஷன் 4 விண்கலம் இதுவரை கிட்டத்தட்ட 6 முறை பூமியை சுற்றி வந்துள்ளதாகவும், உள்ளே இருப்பவர்கள் சரியான நேரத்தில் உணவு சாப்பிட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பூமியில் இருந்து சுமார் 590 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வரும் இந்த விண்கலம், 3 நாள் பயணத்தின் முடிவில் சனிக்கிழமை பூமிக்கு திரும்பும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments