கட்டுப்பாட்டை இழந்த லாரி வீட்டில் மோதி விபத்து, குழந்தைகள் உட்பட 5 பேர் உயிர் தப்பினர்

0 1727

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி வீட்டுக்குள் புகுந்த நிலையில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் உட்பட 5 பேரும் உயிர் தப்பினர்.

ராமநாதபுரத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் ம.ரெட்டியபட்டி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி, அதிகாலையில் கானா விளக்கு பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி, வீட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

வீட்டுக்கு முன்பிருந்த டீக்கடையும் விபத்தில் சேதமடைந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் லாரி கட்டுப்பாட்டை இழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments