அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் எனத் தகவல்

0 2138
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் எனத் தகவல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்குக் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஓராண்டாக அமைக்கப்பட்ட அடித் தளத்தின் மீது 360 அடி நீளமும் 235 அடி அகலமும் உள்ள தரைத் தளம் 160 தூண்களைக் கொண்டு எழுப்பப்பட உள்ளது.

அதன் மீது 132 தூண்களைக் கொண்டு முதல் தளமும், அதன்மீது 74 தூண்களைக் கொண்டு இரண்டாம் தளமும் எழுப்பப்பட உள்ளன. ஐந்து மண்டபங்களைக் கொண்ட கோவில் 2023 டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments