ஸ்டேட் வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.7 சதவீதமாக குறைப்பு

0 1633
ஸ்டேட் வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.7 சதவீதமாக குறைப்பு

ஸ்டேட் வங்கி விழாக்கால சலுகையாக வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.7 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. மாத சம்பளதாரர்கள் மட்டுமின்றி மாத சம்பள வரையறையில் வராதவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் எனவும் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

30 ஆண்டுத் தவணையில் கடன் வாங்கும் வாடிக்கையாளர், இந்த வட்டி விகித அடிப்படையில் ஏறத்தாழ 8 லட்ச ரூபாய் வரை சேமிக்க முடியும். மேலும், கடன் தொகையைப் பெறுவதற்கான செயலாக்கக் கட்டணமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments