பிளஸ் 2 அசல் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் ; அரசு தேர்வு துறை

0 4521
பிளஸ் 2 அசல் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் ; தாங்கள் படித்த பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம் எனஅறிவிப்பு

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது. கடந்த 2019- - 20, 2020- - 21ஆம் கல்வி ஆண்டுகளில், முறையே பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பொது தேர்வுக்கான, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே ஏற்கனவே வழங்கப்பட்டது.

இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டதால், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று வழங்கப்படுகிறது. மாணவ - மாணவியர் தங்கள் பள்ளிகளிலேயே சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments