நாய் சேகர் யாரு ? வடிவேலு vs சதீஷ்..!பற்ற வைத்த ரஜினி முருகன்..!

0 6711
நாய் சேகர் யாரு ? வடிவேலு vs சதீஷ்..!பற்ற வைத்த ரஜினி முருகன்..!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாய் சேகர் என்ற பெயரில் புதிய படம் நடிப்பதாக நடிகர் வடிவேலு கூறி வந்த நிலையில், காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும் நாய் சேகர் என்ற படத்தின் முதல் பார்வையை வடிவேலுவின் ரசிகன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாய் சேகர்” என்றால் சின்ன குழந்தைகளும் வடிவேலு என்று சொல்லி விடும்..! அந்த அளவிற்கு படத்தில் அவர் ஏற்று நடித்த வேடங்கள் அவரது பிராண்டாக உள்ளது. 10 வருட இடைவெளிக்கு பின்னர் முழுமையாக படம் நடிக்க களமிறங்கியுள்ள காமெடி நடிகர் வடிவேலு , இடையில் நாயகனாக வேஷம் கட்டிய எலி காலை வாரியதால் தன்னுடைய பிராண்ட் பெயர்களில் ஒன்றான நாய் சேகர் என்ற பெயரில் புதிய படத்தில் நாயகனாக நடிப்பதாக அறிவித்தார்.

புதிய பட அறிவிப்பை தொடர்ந்து தனது பிரச்சனை எல்லாம் தீர்ந்தது என்ற மகிழ்ச்சியில் அவரது பிறந்த நாளை நாய் சேகர் படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில நாய்சேகர் என்ற பெயரில் ஏற்கனவே புதிய படம் ஒன்று உருவாகி வருவதாக கேள்வி எழுப்பிய போது கூட அதுவெல்லாம் பிரச்சனையே இல்லை என்பது போல இயக்குனர் சுராஜ் பேசினார்..!

இந்த நிலையில் வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று, சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள நாய் சேகர் படத்தின் முதல்பார்வையை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் வெளியிட்டு திரையுலகில் சர்ச்சை தீயை பற்ற வைத்துள்ளார்.

நாய் சேகர் என்ற பெயரே தனக்கு தான் சொந்தம் என்கிற அளவுக்கு வடிவேலு பிரஸ் மீட்டில் அலப்பறை கொடுத்த நிலையில், வம்புக்கு அதே பெயரிலான படத்துக்கு வடிவேலுவின் ரசிகன் என்று கூறி முதல்பார்வையை சிவகார்த்திகேயன் வெளியிட்டிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

லைக்கா தயாரிப்பில் வடிவேலு நடிக்க இருக்கும் நாய் சேகர் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில் , கல்பத்தி அகோரம் தயாரிப்பில் சதீஷ் நடிப்பில் நாய் சேகர் என்ற படத்தின் முதல் பார்வை வெளியாகி இருப்பதால் இருதரப்பும் தலைப்பை விட்டுக்கொடுக்க தயாரில்லை என்பது தெளிவாகியுள்ளது.

ஏற்கனவே தான் நடிக்கின்ற படங்கள் எல்லாம் பஞ்சாயத்தில் சிக்குவதால் சில காலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்த வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிக்க ஒப்புக் கொண்ட நாய் சேகர் படத்தின் பெயரே தற்போது பஞ்சாயத்தில் சிக்கி இருப்பதால், வடிவேலு மனதளவில் குழப்பம் அடைந்துள்ளதாகவும் இருந்தாலும் எப்படியும் அந்த டைட்டில் தனது படத்திற்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் நாய் சேகரோ.. குரங்கு குமாரோ... திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும், நடிகர்களும் டைட்டிலுக்கு சண்டை போடுவதை விட்டு ரசிகர்களை மகிழ்விக்க கூடிய நல்ல கதையை தேர்ந்தெடுத்தால் படம் வெளியான பின்னர் நஷ்டம் ஆகாமல் தப்பிக்கலாம்..! என்பதே திரையுலக பிரம்மாக்களின் கருத்தாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments