ஆட்டத்தில் கவிழ்த்து லட்சங்களை பறித்த அரசியல் தம்பதி கைது..!

0 4093
ஆட்டத்தில் கவிழ்த்து லட்சங்களை பறித்த அரசியல் தம்பதி கைது..!

வெளிநாட்டில் மருத்துவ படிப்பிற்காக கல்லூரி இடம் வாங்கி தருவதாகவும் மற்றும் கடன் பெற்று தருவதாகவும் கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட டிக்டாக் புகழ் தம்பதியை போலீசார் கைது செய்தனர். டூயட்டுக்கு நடனமாடி மோசடிக்கு வலை விரித்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

டிக்டாக் மாமி என்று செல்லமாக அழைக்கபடும் கோகவரம் பாஜக கட்சி தலைவராக உள்ள காயத்திரி இவர் தான்..! பெரியவர் போல இருக்கும் பேராசிரியரான தனது கணவர் ஸ்ரீதருடன் ஜோடி போட்டு ஆடும் காயத்திரி மாமியின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு..!

தமிழகத்தில் ஜோடியாகவும் , சிங்கிளாகவும் திறமை காட்டி வம்பு வழக்குகளில் சிக்கி சீரழிந்த சில்வண்டுகள் போல தெலுங்கு தேசத்தில் காயத்திரி - ஸ்ரீதர் ஜோடி டிக்டாக்கில் அடைந்த பிரபலத்தை பயன்படுத்தி பணமோசடி செய்து தற்போது போலீசில் சிக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

சினிமா பாட்டுக்கும் டயலாக்கிற்கும் டிக்டாக்கில் திறமை காட்டிய தம்பதியை ஏதோ பெரிய லெவலில் இருப்பதாக தவறாக கருதி, ஏலூரை சேர்ந்த கெளரிசங்கர் என்பவர் தனது மகளை வெளிநாட்டு மருத்துவ கல்லூரியில் படிக்க வைக்க உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்போது தனக்கு வெளிநாடுகளில் பல கல்லூரிகளில் பழக்கம் இருப்பதாக கூறிய காயத்திரி ஸ்ரீதர் தம்பதி, கட்டாயம் மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாகவும் கூறி பல தவனைகளில் 44 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்ததாகவும் சொன்னபடி மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இதே போன்று தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரிசி ஆலை தொடங்குவதற்கு வங்கியில் கடன் பெற்று தருவதாக 4 பேரிடம் இருந்து தலா 4 லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும், மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுத் தருவதாக கூறி தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து பல லட்சங்களை வாரிச்சுருட்டிய இந்த டிக்டாக் தம்பதி மோசடி பணத்தில் சொகுசுவாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்டம் காட்டிய இந்த டிக்டாக் தம்பதி மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனை அடுத்து ஸ்ரீதர் மற்றும் காயத்ரியை கட்டம் போட்டு தூக்கிய போலீசார் விசாரணைக்கு பின்னர் அவர்களை கைது செய்தனர். ஜோடியாக டிக்டாக்கில் நடனதிறமையை காட்டிய கணவன் மனைவி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைத்தனர்.

டிக்டாக் மட்டுமல்ல அரசியலில் ஜொலிப்பவர்கள் நினைத்தால் எதையும் முடித்துக் கொடுத்துவிடுவார்கள் என்று நம்பி பணம் கொடுத்தால், பணத்தை இழக்கும் விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த மோசாடி தம்பதியும் ஒரு சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments