அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டு உயர்வு

0 2901
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டு உயர்வு

தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பு 30 ஆண்டுகளில் இருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மனிதவள மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனா சூழலில் பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால், வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டு 32 வயதாக உயர்த்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த அளவுக்கும் குறைவான, அதிகமான வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும் உச்ச வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்குத் தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்சவரம்பு மாற்றமின்றித் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments