தலிபான் அரசின் துணை பிரதமர் அப்துல்கானி பரதர் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபிக்க புதிய வீடியோ வெளியீடு

0 2012
தலிபான் அரசின் துணை பிரதமர் அப்துல்கானி பரதர் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபிக்க புதிய வீடியோ வெளியீடு

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் துணை பிரதமர் முல்லா அப்துல்கானி பரதர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்த அவரிடம் நடத்திய நேர்காணல் வீடியோ ஒன்றை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.

ஹக்கானி அமைப்பை சேர்ந்த கலில் உர் ரகுமானுக்கும், பரதருக்கும் இடையே அதிகாரப் பகிர்வு தொடர்பாக சில தினங்களுக்கு முன் காபூலில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அப்துல்கானி பரதர் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்பது தெரியாததால், அவர் இறந்திருக்கலாம் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாயின.

அதனை மறுத்து சில தினங்களுக்கு முன் ஆடியோ ஒன்றை பரதர் வெளியிட்டிருந்தார். இந்த சூழலில் தற்போது டிவிட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவில், தங்களது அமைச்சரவைக்குள் மோதல் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த நேர்காணல் காந்தகாரில் எடுக்கப்பட்டுள்ளதால் அவர் அங்கு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments