ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை ; குழந்தையை வாங்கிய முதியவரிடம் அதிகாரிகள் விசாரணை

0 1634
ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை ; குழந்தையை வாங்கிய முதியவரிடம் அதிகாரிகள் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தையை அதிகாரிகள் மீட்டனர்.

மேட்டு உடையார் பாளையத்தை சேர்ந்த 67 வயதான அங்கமுத்து - சாந்தி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் சக்திவேல் என்பவரிடம் முதல்கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து 10 நாட்களுக்கு முன் 3 மாத ஆண் குழந்தையை வளர்ப்பதற்காக அங்கமுத்து வாங்கியிருக்கிறார்.

குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அக்கம் பக்கம் வசிப்பவர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரித்த அதிகாரிகள், விலைக்கு வாங்கிய குழந்தையை மீட்டு சேலம் சின்ன திருப்பதி பகுதியில் இருக்கும் லைப் லைன் டிரஸ்டில் ஒப்படைத்தனர். குழந்தையை விற்ற பெற்றோர் யார்? என முதியவர் அங்கமுத்துவிடம் குழந்தைகள் நல குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments