வெளிநாடுகளில் பணியாற்றும் ஆப்கான் தூதரக அதிகாரிகள் போதிய பணமின்றி தவிப்பதாக வேதனை

0 2373

வெளிநாடுகளில் பணியாற்றும் ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள் நூற்றுக்கணக்கானோர் போதிய பணமின்றி, கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால், வெளிநாடுகளில் உள்ள அந்த நாட்டின் தூதரக செயல்பாடுகளில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

தூதரக அதிகாரிகள் பணியைத் தொடரலாம் என்று தலிபான் அறிவித்த போதிலும், கனடா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றுபவர்கள் போதிய பணமின்றி தூதரக நடவடிக்கைகளை செயல்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

அகதிகளாக தங்களை ஏற்றுக் கொள்ளுமாறு தாங்கள் பணிபுரியும் நாடுகளிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தனது பெயரை கூறினால் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எதுவும் நேரிடலாம் என்றும் செய்தி நிறுவனத்திடம் பேசிய போது அவர் அச்சம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments