அரசு மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை செய்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

0 1909

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் முதன்முறையாக பச்சிளம் குழந்தைக்கு
இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பள்ளப்பட்டியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்ததிலிருந்து அழாததுடன், இதயத் துடிப்பு அதிகமானதால் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், குழந்தையின் இதயம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதன்பின் பச்சிளம் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருதய கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து, குழந்தை அழத்தொடங்கியது.

தற்போது தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை, மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவமனை
கண்காணிப்பாளர் டாக்டர் தனபால் ஆகியோர் பாராட்டினர்.

தனியார் மருத்துவமனையில் 5 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த அறுவை சிகிச்சை சேலம் அரசு மருத்துவமனையில் இலசமாக மேறகொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments