சட்டவிரோதமாக மருந்தகத்தில் மருத்துவம் பார்ப்பதாக குற்றச்சாட்டு ; மருந்தகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியிரிடம் புகார்

0 1952
சட்டவிரோதமாக மருந்தகத்தில் மருத்துவம் பார்ப்பதாக குற்றச்சாட்டு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், மருத்துவர்கள் ஆலோசனையின்றி சட்டவிரோதமாக மருந்தகத்தில் பணிபுரியும் ஊழியர்களே பொதுமக்களுக்கு ஊசி போட்டு மருத்துவம் பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கூடங்குளம் காவல் நிலையம் அருகே வி.கே. என்ற பெயரில் இயங்கி வரும் மருந்தகத்தில், காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனையின்றி அங்கு பணியாற்றும் ஊழியர்களே ஊசி போடுவதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ ஆதாரத்துடன் ஜாக்சன் என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவப் பணிகள் இணை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் இந்த மெடிக்கலுக்கு அருகே இயங்கி வந்த மேரிஸ் முதலுதவி மையம், மருத்துவர் ஆலோசனையின்றி சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரில் சீல் வைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments