பள்ளி மாணவர்கள் இருவரின் வங்கிக் கணக்கில் 906.2 கோடி ரூபாய் வரவு

0 11744
பள்ளி மாணவர்கள் இருவரின் வங்கிக் கணக்கில் 906.2 கோடி ரூபாய் வரவு

பீகாரில் பள்ளி மாணவர்கள் இருவரின் வங்கிக் கணக்குகளில் தொள்ளாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தவறுதலாக வரவு வைத்திருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்திகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் ஆசிஷ் கணக்கில் 6 கோடியே 20 இலட்ச ரூபாயும், குருசரண் விஸ்வாஸ் என்கிற மாணவனின் கணக்கில் 900 கோடி ரூபாயும் இருப்பு இருந்தது ஏடிஎம்மில் பணம் எடுத்தபோது தெரியவந்தது.

தகவல் பரவியதும் அந்த ஊரில் வடக்குப் பீகார் ஊரக வங்கியில் கணக்கு வைத்திருந்த அனைவரும் தங்களுக்கும் அப்படியொரு அதிர்ஷ்டம் வந்துள்ளதா என்பதை அறிய ஏடிஎம்முக்கு விரைந்தனர். அதிகத் தொகை இருப்புள்ளது உண்மைதானா என மாணவர்களின் பெற்றோர் இணையத்தள மையத்துக்குச் சென்று பார்த்து உறுதி செய்து கொண்டனர்.

மறுநாள் வங்கி திறந்ததும் மேலாளரிடம் விசாரித்தபோது, கணினி அமைப்பில் உள்ள கோளாறால் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், பெருந்தொகை இருப்புள்ளதாகக் காட்டும் அதே நேரத்தில், உண்மையிலேயே அவர்களின் கணக்கில் பணம் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments