லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு சான்று - அதிமுக

0 2401

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியுள்ளது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக தெரிவித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய சலசலப்புகளுக்கும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் அதிமுகவும் அதன் நிர்வாகிகளும் தொண்டர்களும் என்றும் அடிபணிந்ததில்லை எனத் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments