7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ; இறுதி விசாரணையை அக். 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைப்பு

0 1334
இறுதி விசாரணையை அக். 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைப்பு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் இறுதி விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது போல், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இடஒதுக்கீடு தொடர்பான அறிக்கைகள் படித்து பார்க்க வேண்டி உள்ளதால், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் இறுதி விசாரணை அக்டோபர் 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments