நல்ல சாலை வசதிக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 1957
நல்ல சாலை வசதிக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நல்ல சாலை வசதிகளைப் பெறுவதற்கு மக்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என மத்தியச் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

98 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெல்லி - மும்பை இடையே 1380 கிலோமீட்டர் தொலைவுக்கு விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் குறித்து அரியானாவில் நிதின் கட்கரி ஆய்வு செய்தார். அப்போது சுங்கக்கட்டணத்தால் சாலைப் போக்குவரத்துக்கான செலவு அதிகரிப்பதாகச் செய்தியாளர்கள் வினவினர்.

அதற்குப் பதிலளித்த அவர், தரமான விரைவுச் சாலைகளால் பயண நேரமும், எரிபொருள் செலவும் குறைவதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் விரைவுச் சாலையை ஹெலிகாப்டர் இறங்குதளமாகவும், சிறிய வகை விமானங்களின் ஓடுபாதையாகவும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments