நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

0 2864
நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே, நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி, தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அய்யநேரி பகுதியைச் சேர்ந்த கமலநாதன் - ஷிபா தம்பதியர் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.

அவர்களது மகள் அனுசியா, கடந்த 12 ஆம் தேதி ஆவடி மையத்தில் நீட் தேர்வு எழுதினார். முதன் முறையாக நீட் தேர்வு எழுதியிருந்த அவர், தோல்வி பயம் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

40 சதவீத தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் சந்தித்து மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அரசு அறிமுகப்படுத்தியுள்ள 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments